ALL TYPE OF TEACHING LEARNING MATERIALS

Recent News

தேசியக் கொடியில் உள்ள 24 ஆரங்கள் அசோகர் பரப்பிய 24 தர்மங்கள்



 

அசோக சக்கரத்தில் ஏன் 24 ஆரக்கால்கள் என்ற சிந்தனை வட்டம் பற்றிய கருத்துக்களை நடத்தும்போது பல இடங்களில் இதற்கான காரணத்தை தேடியபோது சிக்கியதுதான் இது. வட்டத்தை  24 சமபாகங்களாக பிரிப்பது சற்று கடினமாக இருந்தது. பிறகு எப்படி எந்த கணக்கின்படி பிரித்திருப்பர் என தோன்றியது சிந்தனையை சற்று ஓடவிட்டபோது தோன்றியது


360° ஐ 24 ஆரக்கால்களால் வகுத்தால் 15° வருகிறது. ஒவ்வொரு ஆரக்கால்களுக்கும் இடையில் 15° இடைவெளி எதற்கு என பல கேள்விகளால் தேடல் பணியில் ஈடுபட்டபோது கிடைத்த சில தகவல்கள்.


தேசியக் கொடியில் உள்ள 24 ஆரங்கள்

அசோகர் பரப்பிய 24 தர்மங்களை குறிக்கிறது என குறிப்பிட்டிருந்தது.


 24  தர்மங்கள்:

     

1.அஹிம்சை

  (உயிர்களுக்கு இன்னா செய்யாமை)


2.அப்பந்தா

   (சிக்கனம், சேமிப்பு)


3.அபிச்சதி       

பயபக்தி (பெரியோர்&ஆசிரியர்)


4.அபசினவம்  

  (மானமுடைமை)


5.உத்சஹா 

   (உற்சாகமாக செயலாற்றுதல்)


6.கிருதக்ஞாதா

   (செய்நன்றி அறிதல்)


7.சத்யம்  

   (நேர்மையாக இருத்தல், உண்மையை போற்றுதல்.)


8.சமயப்பொறை

( மாற்று மதக்கருத்துக்களையும் மதித்தல்)


9.சாதுதா   

( நல்லவர்களாக இருத்தல்)


10.சாம்யமா   

 (புலனடக்கம்)


11.சாத்வம்    

 (நன்மை தரும் செயல்களைச் செய்தல்)


12.சிரமசேவிதம்  

( கடின உழைப்பு)


13.சுஷ்ருதா    சரீர சஹாயம்

(உடல் நோய் தீர்த்தல்)


14.சௌசம்    

(உடல் தூய்மை)


15.தயை   

  (இரக்ககுணம்)


16.தானம்   

 (வறியோர்க்கு வழங்கல்)


17.தம்மதானம்    

( தர்மத்தைப் பரப்புதல்)


18.தம்ம விஜயம்   

(அறத்தின் வழிபெறும் வெற்றி)


19.தர்மதாமதா    

 (அறம் செய்வதில் ஆர்வம்)


20.த்ருதபக்திதா   

 (மாறாத அன்புள்ளம்)


21.பயம்       

(பாவம் செயவதில் அச்சம்)


22.பரிக்‌ஷா   

  (தன்னம்பிக்கை)


23.பாவசுத்தி   

(எண்ணத்தூய்மை)


24.மார்த்தவம்

     (அருளுடைமை)அசோக சக்கரம்: 



Share:
  • No comments:

    Post a Comment

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags