ALL TYPE OF TEACHING LEARNING MATERIALS

Recent News

நீட் மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வுகளை ஒத்திவைக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது


மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும்,ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்/ ஒத்தி வைக்க வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என்று தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

<இந்நிலையில், நீட் மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில், மனுதாரர் மற்றும் அரசுத் தரப்பு வாதத்தை கேட்டறிந்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது

சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் என பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்வு நடைபெறும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்று, தேர்வு குறித்த அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. இந்த விவகாரத்தில் தலையிட்டால் அது மாணவர்களின் நலனை பாதிக்கும் என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

 

Share:
  • No comments:

    Post a Comment

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags