ALL TYPE OF TEACHING LEARNING MATERIALS

Recent News

தரமற்ற மருந்துகள் எவை? இணையதளத்தில் பட்டியல்!

 சந்தையில் விற்பனை செய்யப்படும், 35 மருந்துகள் தரமற்றவை' என, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.


நாட்டில் விற்பனை செய்யப்படும், அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும், மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் வாயிலாக ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோல், போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, ஜூலை மாதத்தில் மட்டும், 808 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில், 773 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், காய்ச்சல், நுரையீரல் பாதிப்பு, வாயு பிரச்னை, வாந்தி, வயிறு உபாதைகள் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும், 35 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.


latest tamil news



அதேபோல், கைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினிகள் சிலவும், தரமின்றி இருந்தது தெரிய வந்தது.இவற்றில், பெரும்பாலானவை, ஹிமாசலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன. கர்நாடகா, தெலுங்கானாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகளும் தரமற்றவை என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தரமற்ற மருந்துகளின் பட்டியலை, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம், cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share:
  • No comments:

    Post a Comment

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags