மகிழ்ச்சியின் பாஸ்வேர்ட் என்ன தெரியுமா????
மகிழ்ச்சிக்குக் கூட பாஸ்வேர்ட் உண்டா என வியக்கிறீர்களா? நிச்சயம் உண்டு. நம் தவறுகளை நாம் சரி செய்து கொள்ளும் ஒரு சூழல் வாய்க்கப் பெறுமாயின் அதுவே நம் மகிழ்ச்சிக்கான பாஸ்வேர்ட்.
வாழ்க்கையில் நம் எல்லோருக்குமே அவரவர்களின் ப்ளஸ் மைனஸ் நன்றாகவே தெரியும். ஆனால் ஓடுகின்ற ஓட்டத்தில் அதைக் கண்டு கொள்ளாமல் உதறி விட்டுச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.
ப்ளஸ்ஸை கண்டு கொண்டால் நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ள முடியும். மைனஸைக் கண்டு கொண்டால் நாம் இன்னும் சிறப்பாக வாழ முடியும். வாழும் காலத்திலேயே இதை உணர முடிந்தால் இன்னும் சிறப்பு.
ஏதேனும் ஒரு கட்டத்தில் நாம் எல்லோருமே நான் இப்படி இருந்ததால் மகிழ்ச்சியாக இருந்தேன் எனப் பெருமைப்படவும், இப்படி இல்லாததால் சற்றே சறுக்கினேன் என நினைத்துப் பார்க்கும் ஒரு கட்டம் வரும்.
அந்த காலகட்டத்தில் வீழ்ச்சியை நினைத்துப் பெரிதாக வருந்தாமல் இளம் வயதிலேயே சின்னச் சின்ன தவறுகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
No comments:
Post a Comment