ALL TYPE OF TEACHING LEARNING MATERIALS

Recent News

புதிதாக இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்

 

முக்கிய பணிகளுக்காக, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் இ-பாஸ் நடைமுறை திங்கள்கிழமை (ஆக.17) முதல் அமலுக்கு வருகிறது.

தமிழக அரசு கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், சிகிச்சைகளை அளித்தும், நிவாரணங்களை வழங்கியும் முனைப்புடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

நோய்த் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொது மக்களின் ஒத்துழைப்பையும், நோய்த் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு, ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது.

நோய்த் தொற்று பரவுவதை தடுக்க, திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், பணி சம்பந்தமாக பயணித்தல், வெளியிடங்களுக்குச் சென்று சொந்த ஊர் திரும்புதல் ஆகிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க விண்ணப்பிக்கப்படும் இ-பாஸ் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் கண்காணிக்கப்பட்டு, நோய்த் தொற்று ஏற்பட்டால் அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், பல மாவட்டங்களில் இ-பாஸ் வழங்குவதில் அரசு அதிகாரிகள் முறைகேடு, இ-பாஸ் பெறுவதில் பெறும் சிரமம் இருப்பதாக பொதுமக்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, இ-பாஸ் முறையில் தளர்வை அறிவித்துள்ள தமிழக அரசு, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

அது நாளை திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.அதன்படி, பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் பயணிக்க (மாவட்டங்களுக்கு இடையே) இ-பாஸ் வேண்டி விண்ணப்பிக்கும் போது ஆதார் அல்லது குடும்ப அட்டையுடன் செல்லிடப்பேசி எண்ணை பதிவு செய்தால் எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன் விண்ணப்பித்த அனைவருக்கும்  இ-பாஸ் வழங்கப்படும் எனவும், பொதுமக்கள் தேவையற்ற காரணங்களுக்காக விண்ணப்பிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

எனினும், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வர தற்போதுள்ள இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

கரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த அரசின் நிலையான வழிகாட்டி நடைமுறைகளை கடைபிடிக்கவும், அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது

Share:
  • No comments:

    Post a Comment

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags