ALL TYPE OF TEACHING LEARNING MATERIALS

Recent News

மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் வாழ்க்கையின் வெற்றிப் பயணம் குறித்த ஒரு பார்வை

 

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் வாழ்க்கையின் வெற்றிப் பயணம் குறித்த ஒரு பார்வை.

"இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (சனிக்கிழமை) அறிவித்தார்.

2004-இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான தோனி, டி20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசி-யின் அனைத்து கோப்பைகளையும் இந்திய அணிக்கு பெற்றுத் தந்துள்ளார்.

அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை:

ஓர் பார்வை

டிசம்பர் 2004: சிட்டகாங்கில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டம் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் கால் பதித்தார் தோனி.

அக்டோபர் 2005: இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ரன் வேகத்தை உயர்த்துவதற்காக பேட்டிங் வரிசையில் முன்னதாக களமிறக்கப்பட்டார். விளைவு 145 பந்துகளில் 183 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் இதுதான் தோனியின் அதிகபட்ச ஸ்கோராகும்.

டிசம்பர் 2005: சென்னையில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் களமிறங்கினார். இதுதான் தோனியின் முதல் டெஸ்ட்.

செப்டம்பர் 2007: ராகுல் டிராவிட்டிடமிருந்து கேப்டன் பொறுப்பைப் பெற்றார்.

செப்டம்பர் 2007: ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்குக் காரணம் என்ற கில்கிறிஸ்டின் சாதனையை சமன் செய்தார் தோனி (6 விக்கெட்டுகள்).தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஐசிசி-யின் முதல் டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியின் கேப்டன் ஆனார். இளம் இந்திய அணியை வழிநடத்தி, உலகக் கோப்பையை வென்றும் தந்தார்.

மார்ச் 2008: ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையே முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இறுதி ஆட்டங்களுக்கு முன்னேறின. 3 இறுதி ஆட்டங்களில் முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றதால், 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது தோனி தலைமையிலான இந்திய அணி.

ஆகஸ்ட் 2008: இலங்கையில் முதன்முதலாக ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய அணி. வழிநடத்தியது தோனி.ஆகஸ்ட் 2008: ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வென்றார்.

நவம்பர் 2008: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் ஆட்டத்தில் அனில் கும்ப்ளே காயம் காரணமாக விளையாடவில்லை. இதைத் தொடர்ந்து, முழு நேர டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்றார்.

 டிசம்பர் 2008: ஐசிசி-யின் ஒருநாள் கிரிக்கெட் வீரராகத் தேர்வு செய்யப்பட்டார்.மார்ச் 2009: நியூசிலாந்தில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை முதன்முதலாக வென்றது இந்திய அணி. வழிநடத்தியது தோனி.

ஏப்ரல் 2009: இந்தியாவின் 4-வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

டிசம்பர் 2009: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதன்முதலாக முதலிடம் பிடித்தது. தோனியின் சாதனைகளில் இது முக்கியத்துவம் பெற்றது. 

டிசம்பர் 2009: ஐசிசி-யின் ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதைத் தக்கவைத்துக்கொண்டார். இந்த விருதை இரண்டு முறை கைப்பற்றும் முதல் வீரர் தோனி. 

மே 2010: சென்னை சூப்பர் கிங்ஸை வழிநடத்திய தோனி, முதன்முதலாக ஐபிஎல் பட்டத்தை வென்றார்.

 ஏப்ரல் 2011: இந்திய அணியை வழிநடத்தி 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை பெற்றுத் தந்தார். இறுதி ஆட்டத்தில் முக்கியக் கட்டத்தில் களமிறங்கி 79 பந்துகளில் 91 ரன்கள் குவித்தார். அவர் அடித்த கடைசி சிக்ஸரின் புகழ் என்றும் மறையாது. இறுதி ஆட்டத்தின் ஆட்டநாயகன் விருதையும் அவர் வென்றார்.

மே 2011: தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து 2-வது முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்றது.

நவம்பர் 2011: இந்திய ராணுவத்தின் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டது.

மார்ச் 2013: சௌரவ் கங்குலியைப் பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் ஆனார். 

ஜூன் 2013: தோனி தலைமையில் இந்திய அணி ஐசிசி சாம்பியன் டிராபி தொடரை வென்றது. ஐசிசி-யின் அனைத்து கோப்பைகளையும் வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றார்.  

பிப்ரவரி 2013: டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முதலாக இரட்டைச் சதம் அடித்தார். இந்த ஆட்டத்தில் 224 ரன்கள் குவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் இந்திய விக்கெட் கீப்பர் எடுக்கும் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

மார்ச் 2013: தோனி தலைமையிலான இந்திய அணி, முதன்முதலாக 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.  

ஏப்ரல் 2018: இந்தியாவின் 3-வது உயரிய விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்றார் தோனி.

மே 2018: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி 3-வது முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்றது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்

Share:
  • No comments:

    Post a Comment

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags