இரட்டை திரை வசதியுடன் கூடிய ஆண்ட்ராய்டு போனை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வரும் செப்டம்பர் 10ம் தேதி அறிமுகம் செய்யவிருக்கிறது.
அட்வான்ஸ் மாடல் ஸ்மார்ட்போன் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்யவிருப்பதாக மைக்ரோசாஃப்ட் கடந்த ஆண்டு அறிவித்தது. இது சாதாரண செல்போன் போல் உருவாக்கப்படவில்லை. இரண்டு திரைகளுடன் காணப்படும் இதில் பல சிறப்பு அம்சங்கள் அடங்கியுள்ளன. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய இரட்டை திரை ஆண்ட்ராய்டு போன் Surface Duo என அழைக்கப்படுகிறது. இது செப்டம்பர் 10ம் தேதி அறிமுகமாகவிருக்கிறது.
இதில் 4:3 என்ற விகிதத்தில் இரண்டு 5.6 அங்குல OLED டிஸ்பிளே காணப்படுகிறது. இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இதனை இரண்டாக மடக்கியும் பயன்படுத்திக் கொள்ளலாம். இரண்டு திரையிலும் வேறு வேறு ஆப்கள் மற்றும் இணைய தளங்களை கூட நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.
Surface Duo ஸ்மார்ட் போனில் 6GB RAM மற்றும் 256GB ROM காணப்படுகிறது. 3577 mAh பேட்டரியுடன் கூடிய இந்த போனில் 11 MP சென்சாருடன் ஒரே ஒரு கேமரா மட்டுமே உள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 processor மூலம் இயக்கப்படுகிறது. இதன் ஆரம்ப விலை 1,399 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1 லட்சம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
THANKS TO NEWS7
No comments:
Post a Comment