ALL TYPE OF TEACHING LEARNING MATERIALS

Recent News

மொபைல்போன் பேட்டரியைச் சிறப்பாக பராமரிக்க அசத்தல் குறிப்புகள்!

 நமது மொபைல் போனின் செயல்திறனை மேம்படுத்துவதில் போனின் பேட்டரி பெரும்பங்கு வகிக்கிறது. போனின் நீடித்த ஆயுளுக்கு தரமான பேட்டரி அவசியம்.

ஆனால் மொபைல் போனில் அடிக்கடி ஏற்படும் பெரியதொரு பிரச்சனைகளில் ஒன்று, அதன் பேட்டரி விரைவில் காலியாகி விடுவதே!

நமது போனை முறையாகவும், சரியாகவும் பராமரித்தோம் என்றால் பேட்டரியின் ஆயுள் கூடும். போனின் செயல்திறனும் மேம்படும்.

நமது போனின் பேட்டரியைச் சிறப்பாக பராமரிக்க சில குறிப்புகள்:

# இணையதளப் பயன்பாடு இல்லாதபோது மொபைல் டேட்டாவை ஆஃப் செய்து வைக்க வேண்டும்.

# நாம் செல்போனை பயன்டுத்தாத போது Screen தானாக அணைந்துவிடும் (Sleep) கால அளவைக் குறைவாக (15 விநாடிகள்) வைத்துக் கொள்ள வேண்டும்.

# தேவையான போது பேட்டரி சேவர் மோடில் இயக்குவது சிறந்தது. தற்போதைய அனைத்து போன்களும் பேட்டரி சேவர் மோடுடன்தான் வருகின்றன. இந்த செட்டிங்கில் பேட்டரி நீண்ட நேரம் நீடிக்கும்

# மொபைல் பேட்டரியை 100% சார்ஜ் செய்யாமலும்,10%-க்கு கீழ் இறங்கிவிடாமலும் பார்த்துக்கொள்வது சிறந்தது. 15% முதல் 95% வரையிலான அளவில் பேட்டரியைப் பராமரிப்பது நல்லது.

இது நமது போனை புத்திசாலித்தனமாக சார்ஜ் செய்யும் முறையாகும்.

# Keypad tone மற்றும் Vibration ஆகிய ஒலிகளை அணைத்து வைப்பதன் மூலம் பேட்டரியின் பயன்பாட்டு அளவு குறையும்.

# இணைய இணைப்பு மற்றும் Hotspot ஆகியவை எப்போதும் ON செய்யப்பட்ட நிலையில் இருப்பது பேட்டரியின் பயன்பாட்டை அதிகரிக்கும். எனவே தேவையில்லாத போது Data மற்றும் Hotspot வசதிகளை Off செய்து கொள்வது சிறந்தது.

# தேவையானபோது மட்டுமே GPS மற்றும் Bluetooth வசதிகளை ON செய்யவும். மற்ற நேரங்களில் இவற்றை அணைத்து வைக்கவும்.

# முக்கியமற்ற ஆப்களின் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்த நிலையில் வைக்கலாம்.

# போன் மெமரியைப் பொறுத்தவரை எப்போதும் கால் பங்கு (25%) காலியாக வைத்து இருப்பது பேட்டரியின் திறனை மேம்படுத்தும்.

# பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்படும்போதும், நீண்ட நேரம் போன் பயன்படுத்தும் போதும் பேட்டரியின் அளவு விரைவாகக் குறையவும், சேதமடையவும் வாய்ப்பு உண்டு. இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

# 100% த்தில் இருந்து பூஜ்ஜியத்திற்கோ அல்லது பூஜ்ஜியத்தில் இருந்து 100% அளவிற்கோ பேட்டரி அளவினைக் குறைப்பது அல்லது அதிகரிப்பது பேட்டரியின் செயல்திறனை பாதிக்கும்.

# அதிக பேட்டரியை உபயோகிக்கும் பயன் குறைந்த மற்றும் நீண்டநாள் பயன்படுத்தாமல் உள்ள செயலிகளை நீக்கிவிடுவது சிறந்தது.

# Screen Brightness நமக்குத் தேவைப்படும் அளவிற்கு மட்டும் குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும்.

# Auto brightness செட்டிங் மூலம் பேட்டரியின் பயன்பாட்டு அளவைக் கட்டுப்படுத்த முடியும்.

# போனில் மற்றும் செயலிகளில் இருக்கும் Dark mode வசதிகளைப் பயன்படுத்துவது பேட்டரியின் பயன்பாட்டைக் குறைக்கும்.

# நமது தேவைக்கு ஏற்ப குறிப்பிட்ட நேரத்தில் நமது போன் Off/On ஆகும்படி செட்டிங்ஸ் அமைத்துக் கொள்வது சிறந்தது.

# கையில் கிடைக்கும் எதாவது பவர் அடாப்டரைப் பயன்படுத்தாமல் நமது போனுடன் வரும் அடாப்டரைப் பயன்படுத்த வேண்டும். இது பழுதடையும் போது ஒரிஜினல் அடாப்டரை புதிதாக வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

தரமான ஒரிஜினல் சார்ஜர்களைப் பயன்படுத்துவது பேட்டரியின் செயல்திறனை அதிகரிக்கும்.

# தேவைப்படும்போது Restore factory settings அமைப்பைப் பயன்படுத்தலாம். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நமது மொபைலை ஃபேக்டரி ரீசெட் செய்ய வேண்டும். ஆனால் அப்படி செய்வதற்கு முன்னர் நமது அனைத்து டேட்டாவையும் பேக்-அப் எடுத்து வைத்துக்கொள்வது மிக மிக அவசியம்.

# இரவு நேரங்களில் மொபைல்போனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கச் செல்வதை முற்றிலுமாகத் தவிர்த்துவிட வேண்டும்.

# பயன்பாட்டில் இல்லாதபோது ப்ளூடூத் மற்றும் வைஃபை போன்ற வசதிகளை அணைக்கவும். புதிய தொலைபேசிகளில் தானியங்கி வைஃபை எனப்படும் அம்சத்தையும் அணைத்து வைப்பது சிறந்தது.

# நமது போனை அதிக சூடாகாமல், பார்த்துக்கொள்வது பேட்டரியின் செயல்திறனை அதிகரிக்கும்.

# அதிக பேட்டரி பயன்பாட்டை எடுத்துக் கொள்ளும் Games களை முழுமையாகத் தவிர்த்துவிடுவது நல்லது.

# மொபைல் நெட்வொர்க் முற்றிலும் தேவையில்லை என்றால் விமானப் பயன்முறையை Aeroplane mode இயக்குவது சிறந்தது.

# தேவையான இடங்களில் மட்டும் மொபைல் டேட்டாவுக்கு பதிலாக பாதுகாப்பான வைஃபை பயன்படுத்துவது பேட்டரியின் கால அளவை அதிகரிக்கும்.

ஆனால் பேங்கிங் உள்ளிட்ட முக்கியமான பயன்பாடுகளை பொது இடங்களில் கிடைக்கும் வைஃபை மூலமாக செய்வது பாதுகாப்பானதல்ல.

Mobile phone
Mobile phone

# பயன்பாட்டு அளவினைப் பொருத்து வாரத்திற்கு ஒரு முறையோ, இருமுறையோ போனை Restart செய்வது பேட்டரிக்கு ஊக்கமளிக்கும்.

# Android Software Update-களை அவ்வப்போது செய்துகொள்வது பேட்டரியின் ஆயுளை அதிகரிக்கச் செய்யும்.

# அடிக்கடி பயன்படுத்தும் Apps களை உடனுக்குடன் Update செய்து கொள்வது பேட்டரியின் பயன்பாட்டு அளவினைக் குறைக்கும்.

# Live வால்பேப்பர்கள் அழகாக இருக்கும்தான். ஆனால் இவை பேட்டரி ஆயுளைக் குறைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

# ரிங்டோன்கள் மற்றும் விழிப்பூட்டல்களின் அளவைக் குறைப்பது பேட்டரியின் பயன்பாட்டு அளவைக் குறைக்கும்.

# மோசமான இணைய இணைப்பு நிச்சயம் பேட்டரி விரைவாக தீர்ந்துபோக வழிவகுக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Share:
  • No comments:

    Post a Comment

    Post Top Ad

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags