ALL TYPE OF TEACHING LEARNING MATERIALS

Recent News

நொச்சி இலையில் உள்ள மருத்துவ குணங்கள் !!

 நொச்சி இலையில் உள்ள மருத்துவ குணங்கள் !!


நொச்சி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆவி (வேது பிடித்தல்) பிடித்து வந்தால் மூக்கடைப்பில் தொடங்கி ஜலதோஷம், சளித் தொல்லை, தலைபாரம், தலைவலி என அனைத்துப் பிரச்னைகளிலும் இருந்து நிவாரணம் கிடைக்கும்.


நொ‌ச்‌சி இலையை ‌சி‌றிது ஆமண‌க்கு எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு வத‌க்‌கி ஒ‌த்தட‌ம் இட, மூ‌ட்டுவ‌லி, மூ‌ட்டு ‌வீ‌க்க‌ம் குறையு‌ம். நொ‌ச்‌சி இலையை இடி‌த்து சாறு பி‌ழி‌ந்து  க‌ட்டிக‌ளி‌ன் ‌மீது பூ‌சி வர க‌‌ட்டி கரையு‌ம். ‌வீ‌க்க‌ம் குறையு‌ம்.

 

நொ‌ச்‌சி, தழுதாழை, மா‌வில‌ங்க‌ம் ஆ‌கியவ‌ற்றை சம அளவு எடு‌த்து சாறு ‌பி‌ழி‌ந்து, ஒரு ஆழா‌க்கு எடு‌த்து அ‌‌தி‌ல் 35 ‌கிரா‌ம் பெரு‌ங்காய‌த்தை பொடி‌த்து‌ப் போ‌ட்டு‌க்  கா‌ய்‌ச்சவும். அது குழ‌ம்பு பத‌த்‌தி‌ல் வ‌ந்தது‌ம் அ‌தி‌ல் ஒரு கர‌ண்டி ‌வீத‌ம் எடு‌த்து தொட‌ர்‌ந்து 10 நா‌ட்க‌ள் சா‌ப்‌பிட கு‌ன்ம‌ம் என‌ப்படு‌ம் அ‌ல்ச‌ர் வ‌யி‌ற்றுவ‌லி குணமாகு‌ம்.

 

நொ‌ச்‌சி மல‌ர்களை ‌நிழ‌லி‌ல் உல‌ர்‌த்‌தி பொடி செ‌ய்து இர‌ண்டு ‌சி‌ட்டிகை அளவு எடு‌த்து பன‌ங்க‌ற்க‌ண்டு சே‌ர்‌த்து சா‌ப்‌பிட ர‌த்த பே‌தி, ர‌த்த வா‌ந்‌தி குணமாகு‌ம்.

 

நாள்பட்ட புண்களில் இருந்து ஒழுகும் துர்நாற்றமுள்ள சீழ் மற்றும் பூச்சிகளை ஒழிக்க இலையின் சாறு மேல் பூச்சாக பயன்படுத்தப்படுகிறது. இலைச்சாறு கொண்டு  தயாரிக்கப்பட்ட தைலம் காசநோய் புண்களை ஆற்ற வல்லது. அதுமட்டுமல்ல கொசு விரட்டுவதில் முக்கியப் பங்கு இந்த நொச்சிக்கு உண்டு.

 

நொ‌ச்‌சி‌க் கொ‌ழு‌ந்து, சு‌க்‌கு சே‌ர்‌த்து அரை‌த்து, அதனுட‌ன் ச‌ர்‌க்கரை, நெ‌ய் சே‌ர்‌த்து லே‌கிய‌ம் போல ‌கி‌ண்டி ஒரு ம‌ண்டல‌ம் உ‌ட்கொ‌ண்டு வர ‌சீத‌க்க‌ழி‌ச்ச‌லி‌னா‌ல் ஏ‌ற்படு‌ம் கடு‌ப்பு குணமாகு‌ம்.

Share:
  • No comments:

    Post a Comment

    Post Top Ad

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags