ALL TYPE OF TEACHING LEARNING MATERIALS

Recent News

வெறும் ஐந்து இலைகள் போதும். ஆறாத புண்களை ஆற்றும் அற்புதச் செடி.


 வெறும் ஐந்து இலைகள் போதும். ஆறாத புண்களை ஆற்றும் அற்புதச் செடி.


இந்த செடியின் பெயரை தாத்தா பூண்டு, கிணற்றடி பூண்டு, ஊசிப் பூண்டு, வெட்டுக்காயப்பச்சிலை, செருப்படித்தழை, மூக்குத்திப்பூண்டு கிணற்றடி பாசான் என்று பல பெயர்கள் உண்டு. இதனை பற்றி நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஆபத்து காலங்களில் மிகவும் உதவும் அற்புதமான செடியாகும்.


1. வெறும் 5 இலைகளை எடுத்து மென்று சாப்பிட்டு வர இரத்த அழுத்தத்தை குறைக்கும்.


2. இந்த இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர சர்க்கரை கட்டுக்குள் வரும்.


3. புண்களை விரைவில் ஆற்றும் தன்மை கொண்டது. போர்க்களத்தில் வீரர்களுக்கு ஏற்படும் வெட்டு காயத்தை ஆற்ற இந்த இலையை கசக்கி சாறு எடுத்து புண்களில் தடவி கட்டு கட்ட விரைவில் ஆறிவிடும்.




மேலும் நஞ்சை முறிக்கும் தன்மை கொண்டதாகும்.


4. ஒரு சிலருக்கு காதில் கம்மல் அணிவதால் புண்கள் ஏற்படும். புண்களின் மீது இந்த பூண்டின் சாற்றை தடவ புண்கள் ஆறிவிடும்.


5. சிராய்ப்பு மற்றும் குழி புண்களை விரைவில் ஆற்றும்.


6. வயிற்று புண், அல்சர் உள்ளவர்கள் காலையில் வெறும் வயிற்றில் இந்த இலையை சாப்பிட்டு வர அல்சர் புண்கள் சீக்கிரமாக ஆறி விடும்.



7. உடலில் எங்கு புண்கள் இருந்தாலும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.


8. சாதம் வடித்த கஞ்சியோடு சேர்த்து இந்த இலையை 5 சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி கருமையாக நன்றாக வளரும். முடி உதிர்வது இருக்காது.



9. தேங்காய் எண்ணெயுடன் இந்த இலைகளைக்  காய்ச்சிப் பயன்படுத்தி வந்தால் முடி கொட்டுவது நின்று பொடுகு தொல்லை என்பது இருக்கவே இருக்காது.


 

நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு செடி ஆனால் அதன் மருத்துவ குணங்களை தெரியாமல் இருக்கிறோம். முறையாக தெரிந்து கொண்டு பயன்படுத்துங்கள்.

Share:
  • No comments:

    Post a Comment

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags