பிஸ்தாவின் ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் (Pistachio health benefits)
பிஸ்தாக்கள், உங்கள் உணவுமுறையில் நீங்கள் சேர்த்துக் கொள்ளக் கூடிய ஆரோக்கியமான பருப்பு வகைகளில் ஒன்று ஆகும். அவை அதிகமான ஆற்றல், செறிவான நார்ச்சத்து மற்றும், ஆரோக்கியம் மற்றும் இளமையைப் பராமரிப்பதில் திறன் மிக்கவையான ஆரோக்கியமான கொழுப்புகளையும் நல்ல அளவில் கொண்டிருக்கின்றன. பிஸ்தாவின் ஆரோக்கியம் சார்ந்த நன்மைகளில் சிலவற்றை நாம் இப்பொழுது காணலாம்.
கொழுப்பு அளவுகளைக் குறைக்கிறது: அனைத்துப் பருப்பு வகைகளின் மத்தியில் பிஸ்தாக்கள் மிகவும் குறைவான அளவுகளில் கொழுப்பைக் கொண்டிருக்கின்றன, மேலும் அந்தக் கொழுப்பானது செறிவுறாத கொழுப்பு அமிலங்களின் வடிவத்தில் இருக்கின்றன. பிஸ்தா உட்கொள்வது கெட்ட கொழுப்புக்களைக் குறைத்து நல்ல கொழுப்புக்களை அதிகரிக்க உதவுகிறது. அதன் விளைவாக இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது: பிஸ்தாக்களின் பச்சை மற்றும் ஊதா நிற பருப்புகள், அறிவாற்றலை (சிந்தித்தல் மற்றும் புரிந்து கொள்ளுதல்) மேம்படுத்துவதில் மிகவும் திறனுள்ள லுடெயின், மற்றும் அந்தோசியானின்கள் போன்ற நிறமிகளைக் கொண்டிருக்கின்றன.
எடையைக் குறைக்க உதவுகிறது: பிஸ்தாக்கள் மற்றும் பருப்புகள், பொதுவில் வழக்கமாக கொழுப்பை அதிகரிப்பதாகக் கருதப்படுகிறது. இருந்தாலும், அவை உங்களை நீண்ட நேரத்துக்கு வயிறு நிரம்பி இருப்பது போன்று உணர வைக்கும் உணவுசார் நார்ச்சத்துக்களைப் போதுமான அளவிலும், ஆரோக்கியமான கொழுப்புகளையும் கொண்டிருக்கின்றன.
நீரிழிவு-எதிர்ப்பு: பிஸ்தா, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட, மற்றும் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் உள்ள நபர்களுக்கு, ஒரு மிகச் சிறந்த தேர்வாக இருக்கிறது என்பது மருத்துவரீதியான ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. அது, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துதல், மற்றும் உணவுக்கு முந்தைய இரத்த சர்க்கரை அளவுகளைக் குறைப்பதன் மூலமாக, நீரிழிவை சமாளிக்க உதவுகிறது.
சருமத்துக்கான நன்மைகள்: பிஸ்தா, முதுமைக்கான அறிகுறிகள் தோன்றுவதைத் தாமதிக்க உதவுவது மட்டும் அல்லாமல், கூடவே சருமத்தின் மீதான UV கதிர்களின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளைக் குறைக்கின்ற உயிர்வளியேற்ற எதிர்ப்பொருட்களின் செறிவான ஒரு ஆதாரம் ஆகும். பிஸ்தா எண்ணெய், சருமத்தின் மீது ஈரப்பதமளிக்கும் ஒரு விளைவைக் கொண்டிருப்பதன் மூலம், அதனை மிருதுவாக மற்றும் மென்மையாக வைத்திருக்கிறது.
No comments:
Post a Comment