நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் தூக்கம்.
நம் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தேவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில், எந்த அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தி தேவையோ, அந்த அளவிற்கு மட்டுமே இருக்க வேண்டும். அதிக மாக இருப்பதும் அவசியம் இல்லை; குறைவாக இருப்பதும் பிரச்னை தான்.நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், நோய் தொற்றும் வாய்ப்பு அதிகம் இருக்கும் அதே நேரத்தில், அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தி நம் உடம்பில் இருப்பது, இயல்பான ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
தேவையான அளவு மட்டும் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் மட்டுமே, நோய் தொற்று ஏற்படும் காலங்களில், தன்னம்பிக்கையோடு அதை நாம் எதிர் கொள்ள இயலும். அதனால் தான், சமச்சீரான நோய் எதிர்ப்பு சக்தி இருக்க வேண்டும் என்று சொல்கிறேன்.சரி, சரியான அளவில் நோய் எதிர்ப்பு சக்தி நம் உடம்பில் இருக்க என்ன செய்ய வேண்டும்?துாக்கம்துாக்கம் எப்படி நோய் எதிர்ப்பு சக்தியை சமச்சீராக வைத்திருக்க உதவும் என்று வியப்பாக கூட இருக்கலாம்.
ஆனால், தினமும் இடையூறு இல்லாத ஆறு - ஏழு மணி நேர ஆழ்ந்த துாக்கம், மிகவும் அவசியம். இது, நோய் எதிர்ப்பு சக்தியை சமச்சீராக வைத்திருக்க மிகவும் அவசியம்.ஆழ்ந்து துாங்கும் போது, 'சைட்டோகைன்ஸ்' என்ற ஒருவித வேதிப் பொருள், போதுமான அளவு உற்பத்தி ஆகிறது; இது, கிருமி தொற்றை எதிர்க்கும் வலிமை உடையது.
அதனால், துாக்கம் மிகவும் முக்கியம்.மன அழுத்தம்மன அழுத்தம் இல்லாமல் அமைதியாக இருப்பது அடுத்த முக்கிய மான விஷயம். ஆரம்ப நிலையில் குறிப்பிட்ட அளவிற்கு, 'ஸ்ட்ரெஸ்' ஏற்படுவது, 'அட்ரினலின்' ஹார்மோனை அதிக அளவு சுரக்கச் செய்து, நோயை எதிர்க்கும் சக்தியை தரும் என்பது உண்மை தான்.ஒரு விஷயத்தை எதிர்கொள்ளும் போது, குறிப்பிட்ட அளவில் சிறிது நேரம் மன அழுத்தம் இருந்தால் பிரச்னை இல்லை.
ஆனால், தொடர்ந்து எல்லா நேரமும் மன அழுத்தத்துடனேயே இருப்பது, நோய் எதிர்ப்பு சக்திக்கு எந்த விதத்திலும் பலன் தராது.உணவுஇதில் நாம் கவனிக்க வேண்டியது, காய்கறிகள், பழங்கள்; இவை இரண்டும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் திறன் கொண்டவை.
குறிப்பாக, நல்ல அடர் நிறத்தில் இருக்கும் காய்கறிகள், பழங்களில் இருந்து கிடைக்கும், 'பிளேவினாய்டு' என்ற வேதிப் பொருட்கள், சமச்சீரான நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் உதவும். அதேபோல, நம் பாரம்பரிய சமையலில் பயன்படுத்தப்படும் மஞ்சள் மற்றும் இஞ்சியில் நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே உள்ளது.
இவற்றை எல்லாம் மணத்திற்காகவே நம் முன்னோர் சமையலில் பயன்படுத்தினர் என்று நினைக்கிறோம். வாசனைக்காக என்பது ஒரு பக்கம் இருந்தாலும், கிருமி தொற்றை தடுக்கும் ஆற்றல், இவற்றில் அபரிமிதமாக உள்ளது.'புரோ - பயாடிக்' எனப்படும் ஜீரண மண்டலத்திற்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ள தயிர், புளிக்க வைக்கப்பட்ட இட்லி, தோசை மாவு, இவற்றை எல்லாம் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
உணவுப் பழக்கம் வெகுவாக மாறிவிட்ட இன்றைய நிலையில், நம் பாரம்பரிய உணவு முறைகளுக்கு திரும்ப வேண்டியது, தற்போதைய சூழலில் மிகவும் அவசியம்.'சப்ளிமென்ட்'போதுமான அளவு துாக்கம், சமச்சீரான உணவு, மன அழுத்தம் இல்லாமல் இருப்பது இவற்றோடு, தொற்று நோய் பரவல் இருக்கும் காலங்களில், 'சப்ளி மென்ட்' என்று சொல்லப்படும் இணை உணவாக, வைரஸ் கிருமிகளை எதிர்த்து அழிக்கக் கூடிய, 'ஜிங்க்' மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். அடுத்தது, இயற்கையிலேயே சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் சத்து, 'வைட்டமின் - டி!' ஆனால், சூரிய ஒளியே உடம்பில் படாமல், 'ஏசி'யிலேயே பெரும்பாலான நேரங்களில் இருக்கிறோம்.
அதனால், குறைந்தபட்சம் நோய் தொற்றும் காலங்களில், வைட்டமின் - டி மாத்திரைகளை தினமும் எடுத்துக் கொள்ளலாம். இத்துடன் சேர்த்து, மிதமான உடற்பயிற்சி, மனதை ஒருநிலைப்படுத்த தியானம், யோகா போன்றவற்றையும் செய்ய வேண்டும். கொரோனா தொற்று போன்ற குறிப்பிட்ட விஷயம் மட்டும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் சமயங்களில், செய்தி சேனல்களை தொடர்ந்து பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.
எல்லா நேரமும் எதிர்மறையாகவே, பிரச்னையை பற்றிய எதிர்மறையான தகவல் களையே, 90 சதவீதம் சொல்கின்றனர். தொற்று குறித்து கவனமாக இருக்க வேண்டுமே தவிர, பயந்தால் அது எவ்விதத்திலும் நமக்கு பயன்படப் போவதில்லை. வாழ்க்கை முறைகொரோனா மட்டுமல்ல, எதிர்காலத்தில் இன்னும் பல வைரஸ்கள்வரலாம். நம் முன்னோர் கற்றுத் தந்த உணவுப் பழக்கம், வாழ்க்கை முறையை முறையாக பின்பற்றினாலே, எந்த சூழலையும் இயல்பாக எதிர்கொள்ள முடியும்.
பாரம்பரிய பழக்கத்தை, பழங்கதை என்று ஒதுக்கிவிட முடியாது; அதில், ஏராளமான அறிவியல் உண்மைகள் அடங்கி இருக்கின்றன. உணவு, துாக்கம் என்று அடிப்படை விஷயங்களில், நம் பாரம்பரிய பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை, அடுத்த தலைமுறைக்கும் கற்றுத்தர வேண்டும்.
No comments:
Post a Comment