சொத்தையால அடிக்கடி பல் வலி கடுக்குதா? இதோ சட்டுனு வலியை குறைக்கும் பாட்டி வைத்தியம்...
பல் வலியை போக்க வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே வலியை குறைக்க முடியும். அவற்றில் உள்ள மருத்துவ குணங்கள் வலி நிவாரணியாக செயல்பட உதவுகிறது. எனவே உங்க பற்களை ஆரோக்கியமாக வைக்க இதோ உங்களுக்கான எளிய வீட்டு முறைகள்
பல்வலி வந்தால் போதும் தாங்க முடியாத வலி எடுக்கும். நாமும் எவ்வளவு முயற்சி செய்தும் பல்வலி என்பது குறைந்த பாடாக இருக்காது. இதனால் நம் அன்றாட வேலைகளைக் கூட நம்மால் சரியாக செய்ய இயலாது. இதற்கு அடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளையும் எடுத்து வர முடியாது. ஏனென்றால் அதிகப்படியான மாத்திரைகளால் நமக்கு பக்க விளைவுகள் உண்டாக வாய்ப்புள்ளது.
எனவே இதை இயற்கை வழியில் கையாள்வது நல்லது. சில இயற்கை பொருட்கள் பல்வலியை குறைக்க உதவுகிறது.
உப்பு நீரைக் கொண்டு கழுவலாம்
உப்பு நீர் தான் பல்வலிக்கான சிறந்த சிகிச்சையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் உப்புநீர் ஒரு சிறந்த கிருமி நாசினியாகும். இது உங்கள் பற்களுக்கு இடையில் சிக்கியிருக்கும் உணவுத் துகள்கள் மற்றும் குப்பைகளை தளர்த்த உதவும். எனவே உப்பு நீரைக் கொண்டு எழுவது வீக்கத்தை குறைக்கவும், வாய்வழி காயங்களை குணப்படுத்தவும் உதவுகிறது.
1/2 டீ ஸ்பூன் உப்பை எடுத்து ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து பற்களில் படும்படி கொப்பளியுங்கள்.
ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு கழுவுங்கள்
ஹைட்ரஜன் பெராக்ஸைடு வலி மற்றும் வீக்கத்தை போக்க உதவுகிறது. இது பாக்டீரியாக்களை கொல்லும். பற்களுக்கு இடையே உள்ள உணவுத் துகள்களை நீக்க உதவுகிறது. ஈறுகளில் வடியும் இரத்த போக்கை குணமாக்கும்.
ஹைட்ரஜன் பெராக்சைடை முதலில் நீர்த்துப்போக செய்ய வேண்டும். 3 சதவீத ஹைட்ரஜன் பெராக்ஸைடுடன் நீரை சம அளவு கலந்து மவுத்வாஷாக பயன்படுத்துங்கள். அதை விழுங்க கூடாது.
மிளகுக்கீரை தேநீர்
மிளகுக்கீரை வலியைக் குறைப்பதன் மூலமும், முக்கியமாக ஈறுகளைத் தணிக்கவும் உதவுகிறது. பயன்படுத்திய தேநீர் பையை எடுத்து ஓரிரு நிமிடங்கள் பிரிட்ஜில் வைத்து குளிர்வியுங்கள். பிறகு இதை பற்களில் வைத்து ஒத்தடம் கொடுங்கள். தேநீர் பையை சூடாக இருக்கும் போது கூட பயன்படுத்தி வரலாம். இது உங்க பல்வலியை குறைக்க பயன்படுகிறது.
பூண்டு
பூண்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைய உள்ளன. இது பாக்டீரியாக்களை கொல்லும். அதே நேரத்தில் வலி நிவாரணியாக செயல்படவும் உதவுகிறது. ஒரு பூண்டை நசுக்கி பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த பூண்டை பயன்படுத்துங்கள். பூண்டு விழுதுக்கு சிறிது உப்பு கூட நீங்கள் சேர்த்து கொள்ளலாம். சில பூண்டுகளை வாயில் போட்டு மெல்லுங்கள். இது உங்க பல்வலியை குறைக்கும்.
கிராம்பு
பற்களுக்கு சிகிச்சை அளிக்க கிராம்பு பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிராம்பு எண்ணெய் வலியையும் வீக்கத்தையும் குறைக்க உதவும். கிராம்பு எண்ணெய்யில் யூஜெனோல் உள்ளது. இது ஒரு இயற்கை ஆன்டி செப்டிக் ஆக செயல்படும்.
ஒரு பருத்தி பஞ்சில் ஒரு சில துளிகள் கிராம்பு எண்ணெய்யை போட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவலாம். கிராம்பு எண்ணெய்யை தனியாக பயன்படுத்தக் கூடாது. ஆலிவ் எண்ணெய்யுடன் நீர்த்துப் போகச் செய்து பயன்படுத்துங்கள்.
ஒரு துளி அல்லது இரண்டு துளி கிராம்பு எண்ணெய்யை நீரில் விட்டு மவுத்வாஷாக கூட நீங்கள் பயன்படுத்தி வரலாம்.
No comments:
Post a Comment