ALL TYPE OF TEACHING LEARNING MATERIALS

Recent News

குழந்தைகளுக்கு பிஸ்கட் சாப்பிடக் கொடுப்பது நல்லதா? கெட்டதா?

குழந்தைகளுக்கு 
 பிஸ்கட் சாப்பிடக் கொடுப்பது 
நல்லதா? கெட்டதா? 






பெரும்பாலான தாய்மார்கள் குழந்தைகளுக்கு பிஸ்கட் போன்ற ஸ்நாக்ஸ் உணவுகளையே கொடுக்கின்றனர். இது முற்றிலும் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடியதாகும்.

இன்றைய காலக்கட்டத்தில் தாயார்மார்கள் குழந்தைகள் சாப்பிட அடம்பிடிப்பதால் அவர்களின் பசியை போக்குவதற்காக பிஸ்கட் போன்ற ஸ்நாக்ஸ்களை கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

உண்மையில் பிஸ்கட் தயாரிக்க சேர்க்கப்படும் மைதா, குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பை கார்பனேட் , நிறமிகள், சுவையூட்டிகள் என எதுவுமே உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல. 
குழந்தைகளுக்கு தீங்கு உண்டாக்ககூடியதுதான்.

ஏனெனில் பிஸ்கட்டுகள் நீண்ட நாள்கள் கெட்டுப்போகாமல் இருக்க சேர்க்கப்படும் ஹைட்ரஜனேட் கொழுப்புகள் (பதப்படுத்தி) குழந்தைகளுக்கு ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் பிரச்னையை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

பிஸ்கட்டுகளில் கலோரிகள் அதிகம் உள்ளதால் நாம் எடுத்துக்கொள்ளும் ஒரு பிஸ்கட் செரிமானம் ஆக, குறைந்தது ஒரு மணிநேரமாவது தேவைப்படுகின்றது.
குழந்தைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பிஸ்கட்டுகளை ஒரே நேரத்தில் சாப்பிடும் போது அவர்களுக்கு பசியின்மை ஏற்படுகிறது. 

மற்ற உணவுகளைச் சாப்பிடுவதை குழந்தைகள் தவிர்த்துவிடுவார்கள்.
சாதாரண பிஸ்கட்டுகளுடன் ஒப்பிடுகையில், கிரீம் பிஸ்கட்டுகள் இன்னும் ஆபத்தானவை ஆகும்.

கிரீம் பிஸ்கட்டுகளில் சேர்க்கப்படும் ஃப்ளேவர்கள் மற்றும் நிறங்கள், முழுக்க முழுக்க ரசாயனங்களால் ஆனது. 
அதன் சுவைக்காக சுக்ரோஸ் அதிகமுள்ள வெள்ளைச் சர்க்கரை அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.

இது, பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட எல்லாருடைய உடம்பிலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது.
உப்பு சேர்க்கப்படும் பிஸ்கட்டுகளில் சோடியம் கார்பனேட், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். 

தொடர்ந்து அளவுக்கு அதிகமான உப்பு சுவைகொண்ட 
குர்க்குரே, லேஸ், போன்ற காற்றடைத்த பாக்கட்டுகளில் உள்ள திண்பண்டங்கள் அத்தனையிலும் உப்பு சுவை அதிகம் 
உள்ளவைதான் இவற்றையும் குழந்தைகளுக்கு வாங்கி தராதீர்கள். 
உப்பு சுவை கொண்ட பிஸ்கெட் , 
ஸ்நாக்ஸ்களையும் சாப்பிடும்போது, குழந்தைகளுக்கு சிறுநீரகப் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு.

பிஸ்கட்டுகள் மைதா மாவில் தயார் செய்யப்படுவதால், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

சில குழந்தைக்கு ஒரு டம்ளர் பாலுடன் இரண்டு பிஸ்கட்டுகள் சாப்பிடும்போது, உடலில் கொழுப்புச்சத்து அதிகரித்து, குழந்தைகள் மந்தநிலையுடன் செயல்பட ஆரம்பிப்பார்கள்.
செரிமானக் கோளாறுகளும் ஏற்படலாம்.

சில பிஸ்கட் பாக்கெட்டுகளில், சுகர் ஃப்ரீ பிஸ்கட்டுகள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆனால் இந்த பிஸ்கட்டுகளில் சுக்ரோஸ் நிறைந்த சர்க்கரை சேர்த்திருக்க மாட்டார்கள். 

ஆனால், அதன் சுவைக்காக சுகர் ஃப்ரீ மாத்திரையில் உள்ள மூலப்பொருட்கள், சோள மாவு, சுகர் சிரப் போன்றவை சேர்க்கப்பட்டிருப்பதால் உடலில் உள்ள மெட்டபாலிசத்தின் அளவைக் குறைப்பதோடு, கல்லீரல் சார்ந்த பிரச்னைகளையும் ஏற்படுத்தும்.
எனவே, பிஸ்கட், கேக் வகைகளை
 குழந்தைகளுக்கு தருவதை உடனடியாக நிறுத்திவிடுங்கள்.

பெரியவர்கள், குழந்தைகள், முதியவர்கள், உடல் நலமில்லாதவர்கள் என அனைவருக்கும் பல விதமான நன்மைகளை அள்ளித்தந்து ஆரோக்கியத்தை பாதுகாக்கக் கூடிய ...
நிலக்கடலை, எள், வருகடலையில் செய்த பர்பிகள், 
கொண்டகடலை, பாசிபயிறு, மொச்சை, அளவில்லாத நன்மைகளை அள்ளித்தரும் கொள்ளு, பெரும்பயிறு, காராமணியில் சுண்டல் வகைகள், 
கம்பு, கேழ்வரகு, தினை, வரகு, மக்காச்சோளம்,
சிறு(வெள்ளை)சோளம், போன்ற சிறுதானியங்களின் மாவினில் கஞ்சிகள் செய்து கொடுத்து குழந்தைகளை நோய் நொடி அற்றவர்களாக, மிகவும் ஆரோக்கியம் உடையவர்களாக வளர்க்க முயற்சி செய்யுங்கள்.
 இயற்கை உணவு அல்லது வீட்டில் தயார்செய்த உணவுகளை சாப்பிடக்கொடுப்பதே ஆரோக்கியத்தை கொடுக்கும். 
 மீண்டும் வலியுறுத்தி கூறுகிறேன்... 
உங்கள் குழந்தைகளுக்கு பிஸ்கட் சாப்பிட கொடுப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லதாகும்.

என் இனிய அன்பான நட்புறவுகளே...
உங்கள் அனைவரின் ஆரோக்கியத்திற்கான  குறிப்புகளை அடிக்கடி பகிர்கிறேன்.
Share:
  • No comments:

    Post a Comment

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags