உடல் ஆரோக்கியத்திற்கு புரோட்டீன் மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து என்பது அனைவருக்கும் தெரியும். இது உடலின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் அத்தியாவசியமானது. உடலுக்கு தேவையான ஆற்றலுக்கும், முழுதாக உணரவும், தசைகளின் வளர்ச்சிக்கும், ஊட்டச்சத்துக்களை பதப்படுத்தவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் புரோட்டீன் அவசியம் தேவைப்படுகிறது. ஆகவே அதிகமாக புரோட்டீன் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நீங்கள் நினைக்கலாம்.
அதுமட்டுமின்றி அதிகப்படியான உடல் எடையைக் குறைக்க மேற்கொள்ளும் டயட்டில் கூட மக்கள் புரோட்டீனை அதிகமாகவும், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புக்கள் உட்கொள்வதைக் குறைக்கவும் செய்கிறார்கள். ஏனெனில் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புக்களைப் போல் புரோட்டீன் எடை இழப்பு நோக்கத்தை நாசப்படுத்துவதில்லை.
உலகில் உடல் எடையைக் குறைக்கும் உயர் புரத டயட்டுகள் பல உள்ளன. ஆனால் அவை பல அபாயங்களுடனும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. இக்கட்டுரையில் அதிக புரோட்டீன் உணவை உட்கொள்வதால் சந்திக்கும் சில பொதுவான ஆரோக்கிய பிரச்சனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
உடல் பருமன்..
எடை இழப்பில் புரோட்டீன் அத்தியாவசியமானது தான். ஆனால் அதிகப்படியான புரோட்டீன் உடல் பருமனுக்கு வழிவகுக்கும். அளவுக்கு அதிகமாக புரோட்டீனை உட்கொள்ளும் போது, அவை உடலில் கொழுப்புக்களாக சேகரிக்கப்பட்டு, உடலில் இருந்து அதிகப்படியான அமினோ அமிலங்களை வெளியேற்றுகின்றன. இதன் விளைவாக உடல் பருமன் அதிகரிக்கிறது.
மலச்சிக்கல்..
கார்போஹைட்ரேட்டுக்களை எடுப்பதைத் தவிர்த்து, அதிகப்படியான புரோட்டீனை உட்கொண்டால், அது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். பொதுவாக கார்போஹைட்ரேட்டுக்கள் நார்ச்சத்தில் இருந்து வந்தது. நார்ச்சத்து தான் உடலில் உள்ள கழிவுகளை திரட்டி, எளிதில் உடலில் இருந்து வெளியேற்றச் செய்கின்றன. அதிகளவு நீருடன் நார்ச்சத்தையும் உட்கொண்டால், இப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
வாய் துர்நாற்றம்..
கார்போஹைட்ரேட்டைத் தவிர்த்து, புரோட்டீனை அதிகம் உட்கொள்ளும் போது சந்திக்கும் பிரச்சனைகளுள் ஒன்று தான் வாய் துர்நாற்றம். ஏனெனில் இந்நிலையில் உடலானது வளர்சிதை மாற்ற நிலையில் நுழைந்து விரும்பத்தகாத நாற்றத்தைத் தரும் கெமிக்கல்களைத் தயாரிக்கத் தொடங்குகிறது. இதில் ஒரு மோசமான விஷயம் என்னவென்றால், இந்த வாய் துர்நாற்றமானது பற்களைத் துலக்குவதாலோ அல்லது ப்ளாஷிங் செய்வதாலோ நீங்காது என்பது தான்.
இதய நோய்..
விலங்குகளை அடிப்படையாகக் கொண்ட தாவர தயாரிப்புகள் புரோட்டீனின் சிறந்த மற்றும் முழுமையான ஆதாரங்கள் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் விலங்குகளை அடிப்படையாகக் கொண்ட புரோட்டீன் ஆதாரங்களான இறைச்சி மற்றும் பால் போன்றவற்றில் கொழுப்புக்களும் அதிகம் உள்ளதால், இவற்றை அதிகம் உண்ணும் போ இதய நோய்களின் அபாயம் அதிகரிக்கும்.
சிறுநீரக பாதிப்பு..
உயர் புரத டயட்டை ஒருவர் நீண்ட காலம் பின்பற்றினால், அது சிறுநீரகங்களைப் பாதிக்கும். அதிலும் ஏற்கனவே சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் இந்த டயட்டைப் பின்பற்றினால் நிலைமை முற்றிலும் மோசமாகிவிடும். இதற்கு காரணம் புரோட்டீனை உருவாக்கும் அமினோ அமிலங்களில் உள்ள அதிகப்படியான நைட்ரஜனின் அளவு தான். நைட்ரஜனைப் பிரித்தெடுக்கும் செயல்முறை சிறுநீரகங்களுக்கு அதிக அழுத்தத்தை அளிக்கிறது. மேலும் கடினமாகவும் உழைக்கவும் வைக்கிறது. இப்படி நீண்ட காலம் சிறுநீரகம் செயல்படும் போது, இது சிறுநீரகங்களை மோசமாக சேதப்படுத்துகிறது.
ஒரு நாளைக்கு எவ்வளவு புரோட்டீன் சாப்பிடலாம்? பொதுவாக பெண்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 50 கிராம் புரோட்டீன் தேவைப்படுகிறது மற்றும் ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 60 கிராம் புரோட்டீன் தேவைப்படுகிறது. தசைகளை உருவாக்க முயற்சிக்கும் போது, ஒருவர் ஒரு கிலோ உடல் எடையில் தினமும் 1.2-1.7 கிராம் புரோட்டீனை சாப்பிட வேண்டும்.
No comments:
Post a Comment