ALL TYPE OF TEACHING LEARNING MATERIALS

Recent News

பசியில் இருக்கும்போது எடுக்கும் முடிவு தவறாகுமா...?

பசியில் இருக்கும்போது எடுக்கும் முடிவு தவறாகுமா...??






சமீபத்திய திரைப்படம் ஒன்றில், கோபமாகக் கத்திக்கொண்டிருக்கும் நாயகி ஒருவரிடம், `உனக்கு பசிக்குதுனு நினைக்கிறேன். வா சாப்பிடப் போலாம்' என்று சொல்வார் நாயகன். `பசி வந்தா, நீ நீயா இருக்கமாட்ட... இந்தா, இதைச் சாப்பிடு' என்று சொல்லும் விளம்பரத்தையும் பார்த்திருப்போம்.

ஒருவர் தன் சுயநினைவையே இழந்து வேறொருவராகச் செயல்படும் அளவுக்கு, உளவியல் ரீதியான தாக்கத்தைப் பசி ஏற்படுத்துமா? நிச்சயம் பசி அப்படியான மாற்றத்தை ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்தும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பசி ருசியை மட்டுமல்ல; நிதர்சனத்தைக்கூட மறக்கவைத்துவிடும்!

சமீபத்திய ஆய்வொன்று, `வெறும் வயிற்றோடு இருக்கும்போது, எந்தவொரு முக்கியமான முடிவையும் எடுக்காதீர்கள். மீறி எடுத்தால், அது தவறாக முடிய நேரிடும்' எனக் கூறி நம்மை எச்சரிக்கிறது. அமெரிக்காவின் டண்டி பல்கலைக்கழகம் (University of Dundee) சார்பில் மருத்துவர் பெஞ்சமின் வின்சென்ட் செய்த அந்த ஆய்வில், பசியில் இருக்கும்போது மனிதர்கள் எப்படியெல்லாம் ரியாக்ட் செய்கின்றனர் என்று கண்காணிக்கப்பட்டது.

ஆய்வில் பங்கு கொண்டவர்களுக்கு, அவர்கள் பசியில் இருக்கும் நேரத்திலும் வயிறு நிறைந்திருந்திருக்கும் நேரத்திலும் இலவசப் பணம், இலவச உணவு, இலவச ஆஃபர்கள் போன்றவை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

பசியில் இருக்கும் நேரத்தில் இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டபோது, குறுகிய காலத்தில் கிடைக்கும் குட்டிக் குட்டி பரிசுகளே போதுமெனக் கூறியுள்ளனர் ஆய்வில் பங்கேற்ற அனைவரும்.

`இன்னும் கொஞ்ச நேரம் காத்திருங்கள். இதைவிடப் பெரிய பரிசு உங்களுக்குக் கிடைக்கும்' எனச் சொன்னபோதும், `எங்களுக்கு இதுவே போதும். முதலில் இதைக் கொடுங்கள்' எனக் கூறியுள்ளனர்

இதுவே, வயிறு நிறைந்து பசியின்றி இருக்கும்போது இந்தக் கேள்விகள் கேட்கப்பட, பொறுமையுடன், காத்திருக்கத் தயாரான மனதுடன், தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்துப் பெற்றுள்ளனர். ஆக, பசி காரணமாக, எது சீக்கிரமாகக் கிடைக்கிறதோ அதுவே போதுமென்ற மனநிலைக்கு அவர்கள் வந்துள்ளனர். இதை அடிப்படையாக வைத்து, `பசி ருசியை மட்டுமல்ல; நிதர்சனத்தைக்கூட மறக்கவைத்துவிடும்' எனக்கூறி எச்சரித்துள்ளனர் ஆய்வாளர்கள். 

"பசி எடுக்கும்போது, உடலிலுள்ள சத்துகள் யாவும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கும். முக்கியமாக, உடலில் குளூக்கோஸ் அளவு குறையும். குளூக்கோஸ்தான், ஆற்றலுக்கு அடிப்படை. கவனச் சிதறலால் ஆற்றல் திறன் குறையும். இது, சம்பந்தப்பட்ட நபரை நிதானமிழக்க வைக்கும்.

அந்த நேரத்தில் அவரால் வேறு எதையும் யோசிக்கவோ பகுத்தறியவோ முடியாது போகும். இது, தன்னைச் சுற்றி என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைக்கூட உணர முடியாத அளவுக்கு, ஒருவரைச் சோர்வாக்கிவிடும். இப்படியான தொடர் மாற்றங்களால், பசியில் இருப்பவர்களுக்கு இம்பல்சிவ் பிஹேவியர் எனப்படும் நடத்தை தொடர்பான மாற்றங்கள் யாவும் ஏற்படும்.

இவை அனைத்துக்கும் பிறகு நடக்கும் விஷயங்கள்தான், மேற்கூறப்பட்டுள்ள ஆய்வின் முடிவுகள். அதாவது, `இருப்பதே போதும்' என்ற மனநிலையில், அவசர அவசரமாக முடிவுகளை நோக்கி நகர்வது.

இவை அனைத்துக்கும் ஒரே தீர்வு, பசியில் இருக்கும்போது முக்கிய முடிவுகளை எடுக்காமல் இருப்பது மட்டும்தான். பசியின்போது சாப்பாடு கிடைக்கவில்லை எனச் சாப்பிடாமல் இருப்பவர்களைவிடவும், சாப்பிட நேரமில்லை எனச் சாப்பிடாமல் இருப்பவர்கள்தான் ஓரளவுக்கு அதிகம். காலை நேரத்தில், நேரமின்மையைக் காரணம் காட்டி உணவை அலட்சியப்படுத்தும் பல ஆயிரம் இளைஞர்கள் இங்கு இருக்கின்றனர். இப்படியானவர்களிடமிருந்து மாற்றம் தொடங்க வேண்டும். பசியை உதாசீனப்படுத்துவது போன்றொரு மோசமான பழக்கம் வேறெதுவும் இல்லை என்பதை இவர்கள் உணர வேண்டும்.

பசி, கவனச்சிதறலுக்கு வழிவகுக்கும்!
பொதுநல மருத்துவர் சுந்தர்ராமன்
வயதானவர்களிலும் சிலர் பசியை ஒதுக்குவது உண்டு. சர்க்கரைநோய், இதயப் பிரச்னைகள் போன்ற வாழ்வியல் சிக்கல்கள் இருப்பவர்களுக்கு, தொடர் பசி இருந்தால் மூளையின் அமைப்பேகூட மாறிவிடலாம். அந்தளவுக்கு அவர்களுக்குப் பசி ஆபத்தானது. ஆக, பசி விஷயத்தில் அனைவரும் அதிக கவனமாக இருக்க வேண்டும்" 

பசியை உதாசீனப்படுத்தாதீங்க மக்களே.
Share:
  • No comments:

    Post a Comment

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags