பொதுவாக வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் என்று அடிக்கடி சொல்லுவார்கள். இருப்பினும் இது ஓரளவுக்கு உண்மையும் கூட.
இதன் சுவை என்பது அது சமைக்கப்படும் முறையை பொறுத்தது. ஏனெனில் வெண்டைக்காய் பிடிக்காதவர்கள் பலர் இருக்கிறார்கள்.
வெண்டைக்காய் சாறை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்பதை பார்க்கலாம்.
தொண்டைப்புண் சாறு மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் வெண்டைக்காய் சாறை தாரளமாக குடிக்கலாம்.
தினமும் காலையில் வெண்டைக்காய் சாறு குடிப்பது உங்கள் சர்க்கரை நோயை குறைக்கும்.
வெண்டைக்காய் சாறு வயிற்றுப்போக்கை குணப்படுத்தி மேலும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
வெண்டைக்காய் சாறு பருகுவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பதோடு இதயத்தை பாதுகாக்கிறது.
வெண்டைக்காய் சாறு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதுடன் குடல் இயக்கங்களை சீர்படுத்துகிறது.
வெண்டைக்காய் சாறில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தின் பலத்தை அதிகரிக்க உதவுகிறது.
வெண்டைக்காய் சாறை தொடர்ச்சியாக குடிப்பது சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
வெண்டைக்காய் சாறு குடிப்பது ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது .
வெண்டைக்காய் சாறு எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது
>
No comments:
Post a Comment