🍌 வாழைப்பழம் மிக எளிதாக கிடைக்கக்கூடியது. அதிக சத்து உள்ளது. இதில் உள்ள நார்சத்து மற்றும் பொட்டாசியம் இதயத்திற்கு மிகவும் நல்லது. நம்மில் அனைவரும் கேள்விப்பட்டிருக்கலாம் வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என சிலர் சொல்வார்கள். சிலர் வாழைப்பழம் உடல் எடையை குறைக்கும் என்பார்கள். எது தான் சரி என நாமும் குழம்பியிருப்போம்.
🍌 உண்மையில் எல்லாவகை வாழைப்பழங்களும் ஒரே மாதிரியான பண்பை பெற்றவை அல்ல. சில வாழைப்பழம் மலச்சிக்கலை ஏற்படுத்தும். இன்னும் சில வாழைப்பழங்கள் வயிற்றுப் போக்கை குணப்படுத்தும். இப்படி எதிர்மறையான பண்பை பெற்றுள்ளன.
உடல் எடையை குறைக்க அல்லது அதிகரிக்க :
🍌 ஒரு வாழைப்பழத்தில் 108 கலோரி உள்ளது. இது 18 கிராம் கார்போஹைட்ரேட்டிற்கு சமமானது. இதில் அதிகளவு பொட்டாசியம், எல்லா வைட்டமின்கள் மற்றும் மற்ற தாதுப் பொருட்கள் உள்ளன.
🍌 உடல் எடையை குறையச் செய்யும் வாழைப்பழம் : செவ்வாழை, பூவம் பழம், மற்றும் கற்பூரவள்ளி, மொந்தம் பழம் ஆகிய பழங்கள் உடல் எடையை குறைக்கச் செய்யும். ஏனென்றால் இவற்றில் அதிக அளவு பி6 மற்றும் நார்சத்து இருப்பதால் இவைகள் உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கும்.
🍌 உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் பழங்கள் : மலை வாழைப்பழம், நேந்திரம் பழம் ஆகியவற்றில் அதிக கலோரி இருக்கிறது. இவை 10மூ அதிக பொட்டாசியம் சத்தை உள்ளடக்கியது. அவற்றிலுள்ள அதிகப்படியான குளுகோஸ் கிளைகோஜனாக மாற்றப்பட்டு தசைகளில் சேமிக்கும்போது தசைகளுக்கு வலிமை தரும். உடல் எடை கூடும். இதனை மில்க்ஷேக் மற்றும் சேலட்டாக சாப்பிடும்போது உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.
வாழைப்பழம் தரும் பயன்கள் :
🍌 அலர்ஜியால் அவஸ்தைப்படுபவர்களுக்கு வாழைப்பழம் மிகவும் நல்லது. ஏனெனில் இதில் தீங்கற்ற அமினோ ஆசிட்டுகள் நிறைந்திருப்பதால், இது அலர்ஜி ஏற்படுவதைத் தடுக்கும்.
🍌 வாழைப்பழத்தில் அதிகப்படியான இரும்புச்சத்து இருப்பதால், இரத்த சோகை நீங்கி, இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
🍌 மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள், வாழைப்பழத்தை சாப்பிட்டால் குடலியக்கமானது சீராக இயங்கி, மலச்சிக்கல் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும்.
🍌 தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறான நாள்பட்ட அல்சர் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும்.
🍌 பொட்டாசியம் அதிகம் உள்ள வாழைப்பழத்தை சாப்பிட்டால், மூளையின் செயல்பாடானது அதிகரிக்கும். எனவே, தினமும் காலையில் எழுந்து ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு, அன்றைய நாளை துவங்குங்கள். *
No comments:
Post a Comment