நம்முள் இரண்டு மிருகங்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன. ஒன்று நேர்மறை எண்ணங்கள் மற்றது எதிர்மறை எண்ணங்கள். எது வெற்றிக் கொள்ளும்? நீங்கள் எதனை தட்டிக் கொடுத்து ஊக்குவித்துக் கொண்டிருக்கிறீர்களோ அதுவே வெற்றி கொள்ளும்.
இதில் நேர்மறை எண்ணங்களை நாம் ஊக்குவித்துக் கொண்டிருந்தால் நம் வாழ்க்கையில் மட்டுமல்ல நம் உடலிலும் பல நல்ல மாற்றங்கள் நிகழும். ஆனால் நாம் எதிர்மறையான எண்ணங்களோடு வாழ்ந்துக் கொண்டிருந்தால் நம் வாழ்வு மட்டுமல்ல நம் ஆரோக்கியமும் கெட்டு போகும். ஏனெனில் நம் மனதுக்கும் உடலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
எதிர்மறை விடயங்கள் எவ்வாறு உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதை சற்று கவனியுங்கள்.
பயம், கவலை, கோபம், பொறாமை, விரக்தி, வெறுப்பு போன்ற எதிர்மறை தாக்கங்கள் நம் மனதில் தோன்றும் பொழுது உடலானது ஒரு ஹோர்மோனை சுரந்து அதனை வெளிப்படுத்தும். அதன் பெயர் ஸ்ட்ரெஸ் ஹோர்மோன் (Stress hormone). இந்த மனநிலை தொடர்ச்சியாக நமக்கு இருக்குமேயானால் அதனையொட்டி சுரக்கும் இந்த சீரற்ற ஹோர்மோன் நமக்கு பல நோய்களை உருவாக்கும். அவற்றில் சில...
குடல் புண் போன்ற சமிபாட்டு தொகுதி பிரச்சினைகள்
குழந்தையின்மை பிரச்சினை
சிறுநீரக பிரச்சினைகள்
எதிர்ப்புசத்தி மண்டலம் பாதிப்புறுதல்
தலைவலி
தூக்கமின்மை
மனநிலை பாதிப்புறுதல்
இதய நோய்கள்
நீரிழிவு நோய்
கர்ப்பைப்பை பிரச்சினைகள்
மூளை செயல்திறன் பாதிப்புறுதல்
மாதவிடாய் சீர் கேடுகள்
தைரொய்ட்
முடக்குவாதம்
இதய துடிப்பு அதிகரித்தல்
நாம் நடை பயிற்சி செய்யும் பொழுது தினமும் ஒரு நாய் நம்மை துரத்துகிறது என்றால் மூளையானது அவ்வேளை ஒரு அலாரத்தை அடிக்கும். அதன் பொழுது சிறுநீரக பகுதியில் இருந்து stress hormones சுரக்கும். இது தொடர்ச்சியாக நடைபெறும் பொழுது மூளை, சிறுநீரகம், கணையம், சமிபாட்டு தொகுதி மற்றும் எதிர்ப்புசக்தி மண்டலமும் பாதிப்புறும்.
நம் உடலினுள்ளும் பயம், கோபம், பொறாமை, விரக்தி, கவலை போன்ற நாய்கள் நம்மை தினம் தினம் துரத்துமேயானால் விளைவு நோய்களாகவே இருக்கும். கூடவே உடல் பருமனும் கூடும்.
வெறுப்பு, கோபம், பொறாமை எல்லாம் பிறரை பாதிப்பதை விட அதிகம் நம் உடலை கறையானாக அரித்து விடும் என்பது தான் உண்மை.
எந்த நோய் வந்தாலும் உங்கள் மனநிலையை அவதானியுங்கள். பின்னர் உங்கள் வாழ்வியலை அவதானியுங்கள். ஏனெனில் நோய் என்பது ஒரு நாள் விளைவல்ல. பல நாட்கள் எடுத்து உருவாகின்றன. அவற்றை சரி செய்ய முயலுங்கள். மருந்துகளை உண்பதால் நோய் தீர்ந்து விட போவதில்லை.
கவலையோ, விரக்தியோ, கோபமோ எதனையும் மாற்றி விடாது என்று உணர்ந்துக் கொள்ளுங்கள். மாறாக அவற்றை மனதில் சுமந்து கொண்டு திரிவது என்பது அழுகிய பொருளை தலையில் சுமந்து திரியும் செயலுக்கு ஒப்பானது.
வாழ்க்கையை இலகுவாக எடுத்துக் கொள்ளுங்கள். துன்ப கடலில் மிதக்கும் படகு தான் வாழ்க்கை. அழுதாலும் புரண்டாலும் மாறாது. நம்பிக்கை எனும் துடுப்புக் கொண்டு பயணிப்போம். வரும் துன்பமும் விலகி வழி விடும். இந்த நம்பிக்கை கொண்டோர் மட்டும் தான் உலகில் ஜெயித்துக் கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் அதே இடத்தில் தான் உழன்றுக் கொண்டு இருக்க வேண்டும்.
அழுக்கு நீர் அகல நல்ல நீரை திறந்து விடுவது போல் நம் மனதில் சேர்ந்து விட்ட அழுக்குகள் நீங்க நல்ல எண்ணங்களை மட்டுமே உருவாக்குங்கள். "எல்லாம் நன்மைக்கே", "நான் ஜெயிக்க பிறந்தவன்", "என்னால் முடியும்" என்ற எண்ணங்கள் உங்களை அழகாக வழி நடத்தும்.
தியானம், யோகா, நடைபயிற்சி போன்றவை உங்கள் மனநிலையை சரி செய்யும். தினமும் இரண்டு வேளை செய்ய முயலுங்கள்.
No comments:
Post a Comment