ALL TYPE OF TEACHING LEARNING MATERIALS

Recent News

அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள்

#அரிசி கழுவிய நீரில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், கூந்தலின் எலாஸ்சிட்டியை அதிகரித்து, அதனால் முடி பாதிக்கப்படுவது  தடுக்கப்படுகிறது.






அரிசி கழுவிய நீரினை சிறிய காட்டனை பயன்படுத்தி முக்கியெடுத்து முகத்தை துடைப்பதால், அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள்  நேரடியாக சருமத்தில் வினைபுரியும்.

வெயிலினால் சருமம் வறண்டு விரைவிலேயே வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க தினமும் அரிசி கழுவிய நீரில் முகத்தை கழுவுவதால் என்றும் இளமையாக இருக்கலாம்.

கூந்தல் அதிக வறட்சியுடனும், மென்மையின்றியும் இருந்தால். அரிசி கழுவிய நீரால் கூந்தலை அலசி சிறிது நேரம் காத்திருந்து பின்பு  சுத்தமான நீரால் கூந்தலை அலச வேண்டும். இதனால்  கூந்தல் இயற்கை நிறத்துடனும் மிகவும் வலுவாகவும், அடர்த்தியாகவும் மற்றும்  நீளமாகவும் காணப்படும்.

அரிசி கழுவிய தண்ணீரை குழந்தைகளை குளிக்க பயன்படுத்துவதால், அவர்களுக்கு சரும நோய்கள் வராமல் தடுப்பதுடன் நல்ல  தூக்கத்தையும் ஏற்படுத்தும்.

அரிசியை வேகவைத்து வடித்த தண்ணீரோடு உப்பு கலந்து குடிக்கும்போது சத்துக்கள் வீணாகமல் முழுமையாக கிடைக்கும். இந்நீரில் கார்போஹைட்ரேட்டுகளும், ஊட்டச்சத்துகளும் வளமாக நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.
Share:
  • No comments:

    Post a Comment

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags