04.03.2022 அன்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள் வருகை புரிந்திருந்தார்கள்
ஐயா அவர்களின் அறிவுரையின்படி
5 .3 .2022 பிற்பகல் நடைபெற்ற கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் பள்ளிக்கு வழங்கப்பட்ட அறிவுரைகள்
👉 பள்ளி வளாகம் தூய்மையுடன் இருத்தல் வேண்டும்.
👉 கழிவறை தூய்மையுடனும் சுகாதாரத்துறை தண்ணீர் வசதியுடன் பராமரிக்கப்பட வேண்டும்.
👉 வகுப்பறைகள் வர்ணம் பூசப்பட்டு பளிச்சென்று காணப்பட வேண்டும்.
👉 மாணவர்கள் அமர வைக்க போதுமான இடவசதி இல்லை என்றால் தலைமையாசிரியர் அறையை வகுப்பறையாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
👉 கரும்பலகைகள் கருப்பு வண்ணம் பூசப்பட்டு பளிச்சென்று காணப்பட வேண்டும்.
👉 கரும்பலகையில் மாணவர்களை கவரும் விதம் வண்ண சாக்பீஸ் கட்டிகளை பயன்படுத்தி எழுதப்பட வேண்டும் மேலும் படங்களும் வரைந்து பாகங்கள் குறிக்கப்பட வேண்டும்.
👉 வகுப்பறைகளில் தேவையில்லாத உடைந்த தளவாட பொருட்கள் மேசை பெஞ்சுகள் உள்ளிட்டவை இருந்தால் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
👉 பள்ளியின் தகவல் பலகையில் துள்ளியமாக பள்ளியின் சார்ந்த விவரங்கள் குறிக்கபடல் வேண்டும்.
👉 மேலும் பள்ளியின் தகவல் பலகையில் உயரதிகாரிகள் பள்ளியை பார்வையிட்ட தேதிகள் குறித்து வைக்கப்பட வேண்டும்.
👉மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் முடிந்தவரை விடுப்பு எடுத்தல் தவிர்க்கப்படல் வேண்டும்.
👉 ஆசிரியர்கள் பாடக்குறிப்பு எழுதி தலைமையாசிரியர் கையொப்பம் பெற்று வகுப்பறைக்கு சென்று பாடம் கற்பிக்கும் பொழுது மேசை மீது வைக்கப்படவேண்டும்.
பாட குறிப்பில் கண்டிப்பாக மனவரைபடம் இடம்பெறவேண்டும்..
பாடக்குறிப்பு எழுதும் பொழுது உரிய படிகளுடன் எழுதப்படல் வேண்டும்.
தொடர் பணியில் மூன்று வகையான வினாக்களும் இடம்பெற வேண்டும்.(Lower, middle, Higher order
Questions)
👉 பாடக்குறிப்பு பதிவேட்டில் மாணவர்களின் வாசிப்புத் திறனை பிரித்து வைத்தல் வேண்டும்.
👉 இரண்டு கோடு 4 கோடு நோட்டுகளில் மாணவர்களுக்கு கடைசி வரியில் இருந்து மேல்நோக்கி எழுத பழகுதல் வேண்டும் மேலும் தேதியிட்டு எழுத வேண்டும்.
👉 வீட்டுப்பாடம் கட்டாயம் கொடுக்கப்படல் வேண்டும்.
👉 எல்லா வகை நோட்புக் களிலும்தேதியிட்டு எழுத பழகுதல் வேண்டும்.
👉 கட்டுரை சுவடிகளில் மாதந்தோறும் இரண்டிற்கு மேற்பட்ட கட்டுரைகள் கொடுக்கப்படல் வேண்டும்.
👉 அட்லஸ் ஜாமென்ட்ரி கிராஃப் போன்றவற்றில் அதிகப் பயிற்சிகள் கொடுக்கப்படல் வேண்டும்.
👉 மேற்கூறிய அனைத்து வகையான நோட்புக்களிலும்
ஆசிரியர் திருத்தம் செய்து கையொப்பம் இட வேண்டும்.
மேலும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் நோட்டுப் புத்தகங்களில் நன்று ,மிக நன்று,
ஸ்டார் போன்ற குறியீடுகளைபோடலாம்.
👉 ஆசிரியர்கள் வகுப்பறையில் கற்றல் உபகரணம் கொண்டு கற்பித்தல் பணியில் ஈடுபடுதல் வேண்டும்.
👉 உணவு இடைவேளைக்கு பிறகு அடிப்படை திறன்களை வளர்க்கும் விதமாக சொல்வது எழுதுதல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கொடுக்கலாம் கணிதத்தில் வாய்ப்பாடு கூறச் செய்யலாம்.
👉 சத்துணவு அன்றாடmenu
படிதான் வழங்கப்படல் வேண்டும்.
👉 Maths kit English kit அன்றாட வகுப்பறை நிகழ்வுகள் பயன்படுத்தப்பட வேண்டும்.
மாணவர்களை பாடப்புத்தகங்களில் விரல் வைத்து படிக்க பழகுதல் வேண்டும்.
👉 மேற்காணும் செயல்களை பள்ளிகளில் நடைமுறைப்படுத்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து ஆசிரியர்களும் தலைமையாசிரியர்களுடன் செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment