இளம் தேடிக் கல்வியில் தாங்கள் அளப்பரிய பணியை செய்து வருகிறீர்கள். தங்களது சுய ஆர்வம் காரணமாக சொந்த செலவில் பல கற்றல் கற்பித்தல் உபகரணங்களை செய்து மாணவர்களுக்கு கற்பித்து வருகிறீர்கள்.
இந்த செயல்களுக்கு ஊக்கம் அளிக்கவும் செலவுகளுக்கு ஈடு செய்யவும் மாதம் ஆயிரம் ரூபாய் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்கு கீழ்க்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
1. ஒரு தன்னார்வலர் ஒரு மாதத்தில் 20 நாட்களாவது பணியாற்றி இருக்க வேண்டும்.
2. இதற்கான வருகை பதிவை கைபேசி செயலியில் பதிவு செய்ய வேண்டும். தங்களிடம் கைபேசி செயலி இல்லை என்றால் வகுப்பு நடைபெறும் பொழுது வருகை பதிவேட்டை ஒரு நோட்டில் குறித்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பிய பிறகு தங்களது உறவினர்களின் கைப்பேசி செயலியிலும் இதனை பதிவு செய்யலாம். வருகை பதிவு செய்வது மிகவும் அவசியம்.
டிசம்பர் 1 முதல் டிசம்பர் 10 வரை மையங்கள் தொடங்கிய தன்னார்வலர்களுக்கு 20 நாட்கள் முடிந்தவுடன் டிசம்பர் மாதத்திற்கான ஊக்கத்தொகை ஏற்கனவே வட்டாரங்கள் வழியாக ஊக்கத்தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வட்டாரங்கள் வழியாக அனுப்பி வைப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது என்ற காரணத்தினால் இந்த மாதத்தில் இருந்து மாநில அலுவலகத்திலிருந்து நேரடியாக ஊக்கத்தொகை அனுப்பி வைக்கப்படும்.
மாநில அலுவலகத்தில் இதற்கான வங்கி கணக்கு சரிபார்ப்பு நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக 92 ஆயிரம் வங்கி கணக்குகள் சரிபார்க்கப்பட்டன. இதில் 11 ஆயிரம் தன்னார்வலர்களின் வங்கிக் கணக்கு மற்றும் மைய திறப்பு நாளில் கீழ்க்கண்ட தவறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
1. வங்கி கணக்கு எண்களுக்குப் பதிலாக தொலைபேசி எண்களை பதிவு செய்துள்ளனர்.
2. தன்னார்வலரின் பெயரில் வங்கி கணக்குகள் இல்லாமல் உறவினர்களின் பெயரில் வங்கி கணக்குகள் உள்ளன.
3. வங்கி கணக்கு எண்ணை தவறாக பதிவு செய்துள்ளனர்
4. வங்கி கணக்குதாரர் பெயர் பதிவு செய்வதற்கு பதிலாக வங்கியின் பெயரை டைப் செய்துள்ளனர்
5. மையம் திறப்பு தேதியை அந்த மாவட்டத்தில் திட்டம் ஆரம்பிக்காத நாளுக்கு முன்னதாக பதிவு செய்துள்ளனர்.
6. மையம் திறந்த பிறகு பாதியிலேயே சிலர் விட்டு விட்டு சென்று விட்டனர்.
மேற்கண்ட தவறுகள் செய்துள்ள தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை அனுப்பப்படவில்லை. இந்த வங்கி கணக்கு பதிவுகளை வேறு யாரும் திருத்த இயலாது. இதனை பதிவு செய்த தன்னார்வலர் மட்டுமே திருத்த இயலும். இந்த தவறான பதிவுகள் மீண்டும் தன்னார்வலர்களுக்கு unfreeze செய்து அனுப்பப்படும். அவர்கள் மீண்டும் சரியான விவரத்தை கைபேசி செயலியில் பதிவு செய்ய வேண்டும்.
சரியாக பதிவு செய்துள்ள 81 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு முதல் கட்டமாக டிசம்பர் 1 முதல் - பிப்ரவரி 10 இடையில் மையம் தொடங்கிய தன்னார்வலர்களுக்கு ஜனவரி பிப்ரவரி மாதத்தில் அனுப்பப்பட வேண்டிய ஊக்க தொகைகள் அனுப்பப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக டிசம்பர் 11 முதல்- பிப்ரவரி 10 வரை மையம் தொடங்கிய 83 ஆயிரம் தன்னார்வலர்களின் வங்கி கணக்குகள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. ஓரிரு நாட்களில் அவர்களுக்கு ஊக்கத்தொகை வந்து சேரும்.
ஒரு முக்கிய விஷயம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மாதத்தில் 20 நாட்கள் பணி செய்திருந்தால் மட்டுமே அந்த மாதத்திற்கான ஊக்கத்தொகை அடுத்த மாதத்தில் வழங்கப்படும். இதற்கு வருகை பதிவு செய்வது மிகவும் அவசியம்.
மார்ச் மாதத்திற்கான ஊக்கத்தொகை ஏப்ரல் மாதத்தில் அனுப்பி வைக்கப்படும்.
அனைவருக்கும் வாழ்த்துகள்.
💐💐💐💐💐
No comments:
Post a Comment