ALL TYPE OF TEACHING LEARNING MATERIALS

Recent News

மருத்துவ விடுப்பு -புதிய விதிகள்-- விரிவான விளக்கம்

 

நண்பர்களே வணக்கம் 🙏🏻...


வாராவாரம் ஒரு பரபரப்பு...

என்கிற வரிசையில் *இந்த வாரம் பரபரப்பு...* 


Tamilnadu Medical council advisory circular no *16/2022.* ..


தன்னிடம் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களுக்கு..

அனுப்பப்பட்ட *ஓர் அறிவுரை ("விழிப்புணர்வு")* 

சுற்றறிக்கை அது... அவ்வளவு தான்👍🏼


 *மருத்துவர்கள் குழுவில் பகிர வேண்டியவை...* 

அனைத்து ஆசிரியர்கள் குழுவிலும் மீண்டும் மீண்டும் பகிரப்படுகிறது....


(Madras Medical council) *TNMC* ... 1914 இல் ஏற்படுத்தப்பட்ட *சட்டப்பூர்வ அமைப்பு* ..

Indian medical council இன் ஓர் அங்கம்....


1915 இல் *Dr. W.B. Bannerman* என்பவர் அதில் முதல் பதிவு செய்த மருத்துவர்‌‌ மற்றும் முதல் தலைவர் ....



அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு...

நடைமுறையில் உள்ள *அடிப்படை விதிகள் Fundamental Rules* 1922 இல் வெளிவந்தது..

( *2022 இல் நூற்றாண்டு விழா காணும் FR க்கு வாழ்த்துகள்* 💐)...


அதில் *விடுப்பு விதிகள் (Leave rules ) 1933* இல் நடைமுறைக்கு வந்தது...

 *இன்று வரை நாம் இதனடிப்படையில் தான் இயங்கி வருகிறோம்* ...



தேவைக்கு ஏற்ப

அரசாணைகள் மூலம் விடுப்பு விதிகளில் உரிய திருத்தம் செய்யப்பட்டு வருகிறது 🙏


கடைசியாக மருத்துவ விடுப்பு விதிகள் *திருத்தம் 2021 ஜனவரியில்* வந்தது

(பார்க்க- இணைப்பு அரசாணை எண் *6 P&AR (FRII)Dept Dt 22.01.21* ) ...


 *நாம் இதைத் தான் தற்போது வரை பின்பற்றுகிறோம்* ....


என்னிடம் படிக்காத மாணவனுக்கு " *படிப்புச் சான்று* " வழங்குமாறு கேட்டார்கள் எனில் அது எவ்வளவு அபத்தமோ அது போல தான்...


 *இல்லாத நோய்க்கு* ...

 *பார்க்காத வைத்தியத்திற்கு* ...

தெரியாத நபர்களுக்கு....

" *மருத்துவச் சான்றிதழ்* " எப்படி ஒரு மருத்துவர் வழங்குவார் 🤔...


இதைத்தான் அந்த *18/07/22 நாளிட்ட* சுற்றறிக்கை தெளிவாக குறிப்பிடுகிறது🙏


மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவர்கள் (Registered medical practitioner- RMP) உறுப்பினர்கள் நலன் காக்கும் பொருட்டு அந்த "அறிவுரை சுற்றறிக்கை" வழங்கப்பட்டுள்ளது....

இது ஏதோ *அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கும் "மருத்துவ சான்றிதழ்"* களுக்கு மட்டும் என்ற கோணத்தில் தகவல் பகிரப்படுகிறது...

இது முற்றிலும் சரியல்ல...


அறிக்கையின் முதல் வரியிலேயே... *பணியில்/கல்வி நிறுவனங்களில்/ நீதிமன்ற பங்கேற்புகளில்* தவிர்க்க வழங்கப்படும்


 "மருத்துவ விடுப்பு சான்றிதழ்" வழங்கும் போது "கவனிக்க" என்று தான் துவங்குகிறது..


எனவே ...

இது "மருத்துவ சான்றிதழ்" வழங்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் ( *அரசு/தனியார்* ) பொதுவான சுற்றறிக்கை🙏


தவறான மருத்துவ சான்றிதழ் வழங்கிவிட்டு *பின்னர் ஏற்படும் சிக்கலை தவிர்க்கும்* நோக்கில் வெளியிடப்பட்ட ஒரு விழிப்புணர்வு அறிக்கை தான் இது....


இது சார்ந்த பதிவுகளை Whatsapp இல் பார்க்கும் போது...

வியப்பாக இருந்தது...


ஒரு பதிவில்...

குடும்ப உறுப்பினர் உடல் நலக்குறைவு...

வீடு கட்டுதல்... போன்ற 

 *ஆசிரியர் இல்ல சுப / துக்க நிகழ்வில் "பங்கேற்க முடியாமல்"* ஆசிரியர்களுக்கு ஆப்பு.... என வந்திருந்தது😁😱....


அப்படி என்றால்...

 *மருத்துவ விடுப்பை பிற காரணங்களுக்காக தான்* பயன்படுத்துகிறேன் என்ற *ஒப்புதல் வாக்குமூலமா* அது😱..


மருத்துவ விடுப்பு...

அனைத்து பரிசோதனைகள் தேவை...

 *5000 / 10000 செலவு* செய்ய வேண்டும்

என மற்றோரு பதிவு🤪...


புரிதல் இல்லை😞


ஐந்து நாட்கள் மேல் மருத்துவ விடுப்பு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில்...


மருத்துவர்கள் *உரிய ஆவணங்கள் வைத்துக் கொள்ளுங்கள்* ...

என்று தான் அதில் உள்ளது... ( அதுவும் அந்த *மருத்துவர்கள் பாதுகாப்பிற்காக* )


இதனால் பிற காரணங்களுக்காக மருத்துவ விடுப்பை தவறாக பயன்படுத்துதல் கட்டுப்படுத்தப்படும்🙏 ( *இது ஏற்கனவே விடுப்பு விதிகளில் உள்ளது தான்* ...)



எனது *இந்த பதிவின் முக்கிய நோக்கம்* 🙏


யாரும் *அச்சப்பட தேவையில்லை* ...


தகுந்த *மருத்துவ சிகிச்சை காரணமாக* விடுப்பு எடுக்கும் எவருக்கும் *எந்த ஒரு பாதிப்பும் இல்லை* ... சிக்கல்

கிடையவே கிடையாது...💐💐💐


 விதிகளில் படி *மருத்துவ சிகிச்சைக்கு* ..

மருத்துவ விடுப்பை எடுக்கலாம்🙏


இப்படிக்கு....


சில ஆண்டுகளாக...


"மருத்துவ காரணங்களுக்கு மட்டுமே மருத்துவ சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு எடுப்பேன்" (மருத்துவ விடுப்பு) 😁 Click here to download ML form என்ற கொள்கையுடன்...

தகவலுக்காக....

 *க.செல்வக்குமார்* ☺️

Share:
  • No comments:

    Post a Comment

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags