ALL TYPE OF TEACHING LEARNING MATERIALS

Recent News

அரிசி சாதம்-ரொட்டி: எது சிறந்தது?*

 

*அரிசி சாதம்-ரொட்டி: எது சிறந்தது?*


உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் எப்படியாவது உடல் எடையை குறைத்துவிட வேண்டும் என்று பல்வேறு உணவுக்கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்கள். உடல் எடையை குறைப்பதற்கு உண்ணும் உணவில் மாற்றங்கள் செய்வது சரியானதுதான்.சிலர் சப்பாத்தி சாப்பிட்டால் உடல் எடையை குறைத்துவிடலாம் என்று கருதுகிறார்கள். சிலரோ சாதம் சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடும் என்று அதனை அறவே தவிர்க்கிறார்கள். 


உடல் எடை குறைவதற்கு அரிசி சாதம் அவசியம் என்பது சிலருடைய கருத்தாக இருக்கிறது.சப்பாத்திக்கு பதிலாக தினை, கேழ்வரகு, கம்பு,சோளம், வரகு, சாமை, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்களை கொண்டு தயார் செய்யப்படும் தோசை, இட்லி, ரொட்டி உள்ளிட்டவற்றை உட்கொள்வது நல்லது என்பது சிலருடைய வாதமாக இருக்கிறது. அதனால் எதை சாப்பிட்டால் உடல் எடையை வேகமாக குறைக்க முடியும்? சாதம் சாப்பிட வேண்டுமா? வேண்டாமா? சப்பாத்தியை சாப்பிடலாமா? அல்லது சிறுதானியங்களில் தயாரிக்கப்படும் ரொட்டியை சாப்பிடலாமா? என்ற குழப்பம் நிறைய பேரிடம் இருக்கிறது.உணவியல் நிபுணர் பூனம் துனேஜாவின் கருத்துப்படி, அரிசி மற்றும் ரொட்டி இவை இரண்டின் ஊட்டச்சத்து மதிப்புகளில் பெரிய வித்தியாசம் உள்ளது. இருப்பினும் உடல் எடை இழப்புக்கு இரண்டும் பயனுள்ளதாக இருக்கும். வாரத்தில் 4 நாட்கள் ரொட்டி சாப்பிட்டால், 2 நாட்கள் சாதம் சாப்பிட வேண்டும் என்கிறார்.``இந்த வழிமுறையை பின்பற்றினால் உணவில் பல்வேறு வகைகளை சாப்பிட முடியும். ஒவ்வொரு நாளும் ஒரு சிறுதானியத்தை உட்கொள்ளலாம். அதிலும் கம்பு, தினை, கேழ்வரகு, சோளம் உள்ளிடவற்றை கொண்டு தயார் செய்யப்படும் ரொட்டியை சாப்பிடுவது எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். இதில் கிளைசெமிக் குறியீடு குறைவாக இருக்கும் என்பதால் இன்சுலின் அளவு வேகமாக அதிகரிக்காது. மேலும் இந்த வகை ரொட்டியில் அதிக நார்ச்சத்தும், புரதச்சத்தும் நிரம்பி இருக்கும். அதனால் இந்த ரொட்டி சத்து மிக்கது. சீராக உடல் எடையை குறைக்க உதவும். அதேபோல் பழுப்பு அரிசியை சாப்பிடலாம். வெள்ளை அரிசியை உட்கொள்வதாக இருந்தால் குக்கரில் வேகவைக்காமல் பாத்திரத்தில் கொதிக்கவிட்டு வேகவைத்து கஞ்சியை வடிகட்டிய பிறகு சாதத்தை உட்கொள்ளலாம்.இருப்பினும் அரிசி, ரொட்டி இரண்டையும் உட்கொள்ளும் அளவில் கவனம் தேவை. ரொட்டியில் குளூட்டன் இருக்கும். அரிசியில் அது இருக்காது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் அரிசி சாதம் சாப்பிடுவதை விட ரொட்டி அதிகம் சாப்பிடுவதுதான் பயனுள்ளதாக இருக்கும். அதிலும் நீரிழிவு நோயால் கடும் பாதிப்புக்கு ஆளானவர்கள் அரிசி சாதம் சாப்பிடக்கூடாது. அதனை சாப்பிட்டு எடை குறையும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய வாய்ப்புள்ளது'' என்கிறார்.உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் மருத்துவ நிபுணர்களிடம் கலந்தாலோசித்துவிட்டு அரிசி, ரொட்டி இவை இரண்டையும் உட்கொள்ளலாம்.

Share:
  • No comments:

    Post a Comment

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags